
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 1 கப்
வரமிளகாய் – 10-15 என்னம் (அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்க்கவும்)
பூண்டு – 8-10 என்னம் (அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்க்கவும்) பூண்டுத்தோலை உறிக்க தேவையில்லை.
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- வறுத்த பொருட்கள் ஆறிய பின் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.