தேவையான பொருட்கள்
முட்டை- 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
துருவிய தேங்காய் – 3 கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மசாலா தூள் – 1 கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
குறு மிளகு- 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
கசகசா- 1/2 தேக்கரண்டி
சோம்பு- 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி இலை – ஒரு கொத்து
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
- வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- துருவிய தேங்காயுடன் கொத்தமல்லி, கசகசா, சோம்பு மற்றும் மிளகுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தேங்காய் பால் (1 கப்) எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அதில் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய்தூள், மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாசனை போன பின்னர் ஒரு கப் தண்ணீர், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து சிறிதளவு கொதிவந்தவுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி கிண்டாமல் கொதிக்க வைக்கவும்.
- முட்டை வெந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடவும்.
ஆங்கிலத்தில் பார்க்க