
தேவையான பொருட்கள்:
புதினா இலை – 1 கப்
மல்லி இலை – ½ கப்
வெங்காயம் – 1 (பாதி அரைப்பதற்கு. பாதி வதக்குவதற்கு)
பச்சை மிளகாய் – 2
இஞ்சிப்பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பட்டை – 1 சிறியது
கிராம்பு – 2
சோம்பு (பெருஞ்சீரகம்) – ½ தேக்கரண்டி
தேங்காய் துருவியது – 1 கப்
நெய், எண்ணெய் மற்றும் உப்பு- தேவையான அளவு
செய்முறை:
- துருவிய தேங்காயை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும். பின் சூடான தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த தேங்காயிலிருந்து பாலை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டுவதற்கு வடிகட்டி, துணி அல்லது கையை பயன்படுத்தலாம்.
- கொஞ்சம் கொஞ்சமாக சூடான தண்ணீரை அரைத்த தேங்காயில் ஊற்றி பாலை எடுக்கவும்.
- பால் முழுவதுமாக வரும் வரை மேலே உள்ள முறையை பின்பற்றவும்.
புதினா கொத்தமல்லி சாதம்:
- அரிசியை கழுவி தனியாக வைக்கவும்.
- பட்டை, சோம்பு மற்றும் கிராம்பை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பாதி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்ஞிப்பூண்டு விழுது சேர்த்து அரைத்துக் கொள்ளவும். முடிந்த வரை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்.
- புதினா மற்றும் மல்லி இலையை சேர்த்து அரைத்து, புதினா மல்லி விழுது தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் பால் ரெடியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில் நெய்யை ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
- பின் வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- பச்சை வாசனை போன பின் புதினா மல்லி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின் கழுவிய அரிசியை சேர்த்து வதக்கவும்.
- கடைசியாக தேங்காய்பால்,உப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலக்கி விட்டு குக்கரை மூடி, 3 விசில் வந்தவுடன் இறக்கவும். (பாஸ்மதி அரிசி என்றால், ஒரு கப் அரிசிக்கு 1½ கப் தேங்காய் பால் ஊற்றவும். மற்ற வகை அரிசி என்றால், ஒரு கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால் ஊற்றவும். தேங்காய் பால் குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். விழுது அரைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.)
தயிர் வெங்காயம் அல்லது உருளைக் கிழங்கு வறுத்து சூடாக பரிமாறவும்.
No comments:
Post a Comment