
பச்சரிசி – 1 கப்
வெல்லம் துருவியது – 1 ½ கப்
முந்திரி பருப்பு – 7-10 (தேவைக்கேற்ப)
உலர்ந்த திராட்சை - 7-10 (தேவைக்கேற்ப)
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
- பச்சரிசி நன்றாக குழைய வேகும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக விடவும். ஒரு கப் அரிசிக்கு, 3 கப் தண்ணீர் ஊற்றவும். அரிசி குழைந்திருப்பது மிகவும் அவசியம்.
- ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே வாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி, குழைந்த அரிசி மற்றும் துருவிய வெல்லம் சேர்த்து அடி பிடிக்காமல் கிண்டவும்.
- வெல்லத்தை நன்றாக அரிசியோடு சேர்த்து மசித்து விடவும்.
- இறக்கும் முன்பு வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.
ஆங்கிலத்தில் பார்க்க
1 comment:
very tasty recipe i like this very mush taste was so good
good logo design in coimbatore
Post a Comment