
தேவையான பொருட்கள்:
பட்டாணி- 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
துருவிய தேங்காய் – 3 கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1/2 கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து சீரகம், நறுக்கிய வெங்காயம் ஒன்றை சேர்த்து வதக்கவும். அதேபோல் தக்காளியை சேர்த்து வதக்கவும் பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்க்கவும். இறுதில் துருவிய தேங்காய் சிறிது வதக்கி இறக்கவும்.
- மேலே வதக்கிய பொருட்களை அரைத்து வைத்துகொள்ளவும்.
- பின்னர் வாணலியில் எண்ணெயை காய வைத்து அதில் நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கவும்.
- பட்டாணி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.
சாதம் மற்றும் சாப்பாத்திக்கு சிறந்தது.
1 comment:
hi this is nice site this is very useful site bachelors thank you for sharing this. I think it will be tasty..
Post a Comment