Tuesday, January 8, 2008

முட்டை குழம்பு



தேவையான பொருட்கள்

முட்டை- 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
துருவிய தேங்காய் – 3 கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மசாலா தூள் – 1 கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
குறு மிளகு- 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
கசகசா- 1/2 தேக்கரண்டி
சோம்பு- 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி இலை – ஒரு கொத்து
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

  1. வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. துருவிய தேங்காயுடன் கொத்தமல்லி, கசகசா, சோம்பு மற்றும் மிளகுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தேங்காய் பால் (1 கப்) எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் அதில் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய்தூள், மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  5. பச்சை வாசனை போன பின்னர் ஒரு கப் தண்ணீர், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து சிறிதளவு கொதிவந்தவுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி கிண்டாமல் கொதிக்க வைக்கவும்.
  6. முட்டை வெந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடவும்.
சாதம் மற்றும் சாப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

ஆங்கிலத்தில் பார்க்க

Sunday, January 6, 2008

பச்சை பட்டாணி குழம்பு


தேவையான பொருட்கள்:

பட்டாணி- 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
துருவிய தேங்காய் – 3 கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1/2 கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை:


  1. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து சீரகம், நறுக்கிய வெங்காயம் ஒன்றை சேர்த்து வதக்கவும். அதேபோல் தக்காளியை சேர்த்து வதக்கவும் பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்க்கவும். இறுதில் துருவிய தேங்காய் சிறிது வதக்கி இறக்கவும்.
  3. மேலே வதக்கிய பொருட்களை அரைத்து வைத்துகொள்ளவும்.
  4. பின்னர் வாணலியில் எண்ணெயை காய வைத்து அதில் நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கவும்.
  5. பட்டாணி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.

சாதம் மற்றும் சாப்பாத்திக்கு சிறந்தது.

Friday, January 4, 2008

புதினா கொத்தமல்லி சாதம்


தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி அல்லது சோனா மசூரி அரிசி- 1 கப்
புதினா இலை
1 கப்
மல்லி இலை
½ கப்
வெங்காயம்
1 (பாதி அரைப்பதற்கு. பாதி வதக்குவதற்கு)
பச்சை மிளகாய்
2
இஞ்சிப்பூண்டு விழுது
1 தேக்கரண்டி
பட்டை
1 சிறியது
கிராம்பு
2
சோம்பு (பெருஞ்சீரகம்)
½ தேக்கரண்டி
தேங்காய் துருவியது
1 கப்
நெய், எண்ணெய் மற்றும் உப்பு- தேவையான அளவு

செய்முறை:

தேங்காய்ப்பால் எடுப்பது எப்படி?

  1. துருவிய தேங்காயை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும். பின் சூடான தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  2. அரைத்த தேங்காயிலிருந்து பாலை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டுவதற்கு வடிகட்டி, துணி அல்லது கையை பயன்படுத்தலாம்.
  3. கொஞ்சம் கொஞ்சமாக சூடான தண்ணீரை அரைத்த தேங்காயில் ஊற்றி பாலை எடுக்கவும்.
  4. பால் முழுவதுமாக வரும் வரை மேலே உள்ள முறையை பின்பற்றவும்.

புதினா கொத்தமல்லி சாதம்:

  1. அரிசியை கழுவி தனியாக வைக்கவும்.
  2. பட்டை, சோம்பு மற்றும் கிராம்பை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பாதி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்ஞிப்பூண்டு விழுது சேர்த்து அரைத்துக் கொள்ளவும். முடிந்த வரை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்.
  3. புதினா மற்றும் மல்லி இலையை சேர்த்து அரைத்து, புதினா மல்லி விழுது தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  4. தேங்காய் பால் ரெடியாக வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு குக்கரில் நெய்யை ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  6. பின் வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  7. பச்சை வாசனை போன பின் புதினா மல்லி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. பின் கழுவிய அரிசியை சேர்த்து வதக்கவும்.
  9. கடைசியாக தேங்காய்பால்,உப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலக்கி விட்டு குக்கரை மூடி, 3 விசில் வந்தவுடன் இறக்கவும். (பாஸ்மதி அரிசி என்றால், ஒரு கப் அரிசிக்கு 1½ கப் தேங்காய் பால் ஊற்றவும். மற்ற வகை அரிசி என்றால், ஒரு கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால் ஊற்றவும். தேங்காய் பால் குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். விழுது அரைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.)


தயிர் வெங்காயம் அல்லது உருளைக் கிழங்கு வறுத்து சூடாக பரிமாறவும்.

Thursday, January 3, 2008

இட்லி வறுவல்

தேவையான பொருட்கள்:

இட்லி 4-5
மிளகாய் தூள்
2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்
சிறிதளவு
உப்பு
தேவையான அளவு
எண்ணெய் - பொறிப்பதற்கு

செய்முறை:

  1. இட்லியை நான்கு துண்டுகளாக வெட்டவும்.
  2. மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்புடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  3. இட்லி துண்டுகளை மிளகாய் தூள் கலவையில் தடவி 15 நிமிடங்கள் வைக்கவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி, இட்லி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

சூடாக பரிமாறவும்.


ஆங்கிலத்தில் பார்க்க


ஆப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்
இட்லி அரிசி
1 கப்
வெந்தயம்
1 தேக்கரண்டி
ஆப்ப சோடா
சிறிதளவு (optional)
தேங்காய் துருவியது
¼ கப்
உப்பு
தேவைக்கேற்ப

செய்முறை:

மாவு அரைக்க:
  1. பச்சரிசி, இட்லி அரிசி மற்றும் வெந்தயம் ஆகியவற்றை 5 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
  2. முதலில் துருவிய தேங்காயை அரைத்துக் கொள்ளவும். ஓரளவு நன்றாக அரைத்தவுடன், ஊற வைத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். மாவை தண்ணியாக கரைத்துக் கொள்ளவும்.
  3. கடைசியாக உப்பு சேர்த்து, மாவை புளிக்க வைக்கவும். மாவு புளித்தவுடன், நன்றாக கலக்கி விட்டு குளிர் சாதனப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மீர்ந்து போன சாதம் இருந்தால், ஒரு கை அளவு சாதத்தை மாவு அரைக்கும் பொழுது சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாக வரும்.

ஆப்பம்:
  1. ஆப்பக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு கரண்டி மாவை கல்லில் ஊற்றவும். உடனே ஆப்பக் கல்லின் இரண்டு கைப்பிடிகளை பிடித்து, மாவு ஆப்பக்கல் முழுவதும் படர்வதற்கு ஏற்றவாறு ஒரு சுற்று சுற்றவும்.
  2. ஆப்பக்கல் தூக்குவதற்கு கடினமாக இருந்தால், ஒரு கரண்டி மாவை எடுத்து ஆப்பக்கல்லின் மேல் பக்கவாட்டு சுவர்களில் ஊற்றி தேய்த்தால் ஆப்ப மாவு கீழிறங்கி ஆப்பத்தின் ஓரங்கள் மெலிதாகவும், நடுவில் தண்டியாகவும் இருக்கும்.
  3. ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஆப்பத்தின் ஒரங்களில் ஊற்றி, மூடி வைத்து மூடி, லேசான சூடில் வேக விடவும்.
  4. ஆப்பத்தின் ஓரங்கள் முறுகலாகவும், நடுவில் மிருதுவாகவும் வந்தவுடன் ஆப்பத்தை எடுத்து விடவும். நடுவில் மிருதுவாக உள்ளதை தெரிந்து கொள்ள, ஒரு கரண்டி வைத்து குத்திபார்க்கலாம்.

கொண்டைக்கடலை குழம்பு அல்லது தேங்காய் பால் அல்லது சட்னியுடன் சூடாக பரிமாறவும்.


ஆங்கிலத்தில் பார்க்க


Wednesday, January 2, 2008

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:


பச்சரிசி 1 கப்
வெல்லம் துருவியது
1 ½ கப்
முந்திரி பருப்பு
7-10 (தேவைக்கேற்ப)
உலர்ந்த திராட்சை - 7-10 (தேவைக்கேற்ப)
நெய் - தேவைக்கேற்ப


செய்முறை:


  1. பச்சரிசி நன்றாக குழைய வேகும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக விடவும். ஒரு கப் அரிசிக்கு, 3 கப் தண்ணீர் ஊற்றவும். அரிசி குழைந்திருப்பது மிகவும் அவசியம்.

  2. ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

  3. அதே வாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி, குழைந்த அரிசி மற்றும் துருவிய வெல்லம் சேர்த்து அடி பிடிக்காமல் கிண்டவும்.

  4. வெல்லத்தை நன்றாக அரிசியோடு சேர்த்து மசித்து விடவும்.

  5. இறக்கும் முன்பு வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.

நெய் சுவையை கூட்டுவதிற்கு தேவையான முக்கியமான மூலப்பொருள். நெய்யின் அளவிற்கேற்ப சுவையும் மாறுபடும்.


ஆங்கிலத்தில் பார்க்க