Thursday, January 3, 2008

ஆப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்
இட்லி அரிசி
1 கப்
வெந்தயம்
1 தேக்கரண்டி
ஆப்ப சோடா
சிறிதளவு (optional)
தேங்காய் துருவியது
¼ கப்
உப்பு
தேவைக்கேற்ப

செய்முறை:

மாவு அரைக்க:
  1. பச்சரிசி, இட்லி அரிசி மற்றும் வெந்தயம் ஆகியவற்றை 5 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
  2. முதலில் துருவிய தேங்காயை அரைத்துக் கொள்ளவும். ஓரளவு நன்றாக அரைத்தவுடன், ஊற வைத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். மாவை தண்ணியாக கரைத்துக் கொள்ளவும்.
  3. கடைசியாக உப்பு சேர்த்து, மாவை புளிக்க வைக்கவும். மாவு புளித்தவுடன், நன்றாக கலக்கி விட்டு குளிர் சாதனப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மீர்ந்து போன சாதம் இருந்தால், ஒரு கை அளவு சாதத்தை மாவு அரைக்கும் பொழுது சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாக வரும்.

ஆப்பம்:
  1. ஆப்பக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு கரண்டி மாவை கல்லில் ஊற்றவும். உடனே ஆப்பக் கல்லின் இரண்டு கைப்பிடிகளை பிடித்து, மாவு ஆப்பக்கல் முழுவதும் படர்வதற்கு ஏற்றவாறு ஒரு சுற்று சுற்றவும்.
  2. ஆப்பக்கல் தூக்குவதற்கு கடினமாக இருந்தால், ஒரு கரண்டி மாவை எடுத்து ஆப்பக்கல்லின் மேல் பக்கவாட்டு சுவர்களில் ஊற்றி தேய்த்தால் ஆப்ப மாவு கீழிறங்கி ஆப்பத்தின் ஓரங்கள் மெலிதாகவும், நடுவில் தண்டியாகவும் இருக்கும்.
  3. ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஆப்பத்தின் ஒரங்களில் ஊற்றி, மூடி வைத்து மூடி, லேசான சூடில் வேக விடவும்.
  4. ஆப்பத்தின் ஓரங்கள் முறுகலாகவும், நடுவில் மிருதுவாகவும் வந்தவுடன் ஆப்பத்தை எடுத்து விடவும். நடுவில் மிருதுவாக உள்ளதை தெரிந்து கொள்ள, ஒரு கரண்டி வைத்து குத்திபார்க்கலாம்.

கொண்டைக்கடலை குழம்பு அல்லது தேங்காய் பால் அல்லது சட்னியுடன் சூடாக பரிமாறவும்.


ஆங்கிலத்தில் பார்க்க


2 comments:

Unknown said...

நான் சமீபத்தில் http://www.valaitamil.com/recipes என்ற இணையதளத்தை பார்த்தேன். அதில் பலவகைபடுத்தபட்ட சமையல் குறிப்புகளும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும்

கொடுக்கப்பட்டிருக்கிறது.

Saku Samayal said...

www.onlysaivam.com plz visit my website