வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 10-12 துண்டு
மஞ்சள் தூள் – சிறிதளவு
மசாலா தூள் – 1½ கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 3 கரண்டி
சோம்பு – ½ தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் பூண்டை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு இடவும்.
- கடுகு,உளுத்தம்பருப்பு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- தக்காளி நன்றாக வதங்கிய பின் மஞ்சள் தூள், மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- பூண்டு வேக வைக்க பயன்படுத்திய நீரை சேர்த்து குழம்பை கொதிக்க விடவும்.
- குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து ஊற்றவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
No comments:
Post a Comment