மொச்சை – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
மசாலா தூள் – 1.5 கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 3 கரண்டி
சோம்பு – ½ தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
- மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும்.
- காலையில் மொச்சையை குக்கரில் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி கடுகு,உளுத்தம் பருப்பு,சோம்பு சேர்க்கவும்.
- கடுகு,உளுத்தம் பருப்பு வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பின் மஞ்சள் தூள், மசாலா தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- வேக வைத்த மொச்சை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பை கொதிக்க விடவும். (மொச்சை வேகவைத்த தண்ணீரையும் சேர்க்கலாம்.)
- குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் தேங்காய் பால் எடுத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
1 comment:
Good and health food i will try to do this mosquito nets Price in coimbatore
Post a Comment