Thursday, December 20, 2007

வெங்காய புளிக் குழம்பு

தேவையான பொருட்கள்:

புளி எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்
8-10
பூண்டு
4-5 துண்டு
வரமிளகாய்
2-3 (கிள்ளிப்போடவும்)
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சிறிதளவு
மசாலா தூள்
1 கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு
1 தேக்கரண்டி
வெந்தயம்
½ தேக்கரண்டி
கறிவேப்பிலை
சிறிதளவு
உப்பு, எண்ணெய்
தேவைக்கேற்ப

செய்முறை:

  1. புளியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து புளியை கரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்க்கவும்.
  3. கடுகு, உளுத்தம் பருப்பு வெடித்தவுடன் வெங்காயம், பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. சிறிது நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மசாலா தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  5. வதக்கிய பின் கரைத்த புளியும், சிறிது நீரும் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.குழம்பு கெட்டியாகி எண்ணெயை கக்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.


வெங்காய புளிக் குழம்பை சூடான சாதம், அப்பளத்துடன் பரிமாறவும்.

No comments: