தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 2
பருப்பு – ¼ கப்
வெங்காயம் – ½
மசாலா தூள் – 1 கரண்டி
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் – சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
- பீர்க்கங்காய் தோலை சீவி விட்டு, பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பீர்க்கங்காய், பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மசாலா தூள் மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
- பீர்க்கங்காயும் பருப்பும் வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தபருப்பு சேர்த்து, அது வெடித்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வேக வைத்த பீர்க்கங்காய் பருப்பை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.
No comments:
Post a Comment