Monday, December 24, 2007

இட்லி பொடி


தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
வரமிளகாய் – 10-15 என்னம் (அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்க்கவும்)
பூண்டு – 8-10 என்னம் (அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்க்கவும்) பூண்டுத்தோலை உறிக்க தேவையில்லை.
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

  1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  2. வறுத்த பொருட்கள் ஆறிய பின் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இட்லி பொடி இட்லி, தோசையுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

ஆந்திர பருப்பு பொடி

தேவையான பொருட்கள்:
பொறிகடலை – 1 கப்
வேர்க்கடலை - 1/4 கப்
வரமிளகாய் – 20-25 என்னம் (அல்லது உங்கள தேவைக்கேற்ப சேர்க்கவும்)
பூண்டு – 10 – 15 என்னம் (அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்க்கவும்)
கறுவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
  1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் பொறிகடலை, வேர்க்கடலை, வரமிளகாய் மற்றும் பூண்டு மற்றும் கறுவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  2. வறுத்த பொருட்கள் ஆற விடவும்.
  3. பின்பு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பருப்பு பொடி சூடான சாதம், இட்லி, தோசையுடன் மிகவும சுவையாக இருக்கும்.

Saturday, December 22, 2007

பேபி கார்ன குடைமிளகாய குழம்பு

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் – 3
குடைமிளகாய் - 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மசாலா தூள் – 1 கரண்டி
மல்லி தூள் - 1/2 கரண்டி
துருவிய தேங்காய் – 3 கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:
  1. பேபி கார்ன்,குடைமிளகாய்,வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. பேபிகார்னுடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து

    குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோவேகவைக்கவும்.

  3. ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு,உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு , உளுந்து வெடித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. மேல் உள்ள அனைத்தும் வதங்கியவுடன், அதில் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  5. பின்னர் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மசாலா தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  6. பச்சை வசனை போன பின்னர் வேகவைத்த பேபி கார்ன் சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  7. இறுதியில் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறவும்.

ஆங்கிலத்தில் பார்க்க

பீர்க்கங்காய் தோல் சட்னி

தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் தோல் – 1 1/2 கப்
வரமிளகாய் - 3
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
  1. ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
  2. கடுகு, உளுத்தம் பருப்பு வெடித்தவுடன் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பின்னர் பீர்க்கங்காய் தோல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. ஆறிய பின்பு உப்பு மற்றும் புளி சேர்த்து அரைக்கவும்.
இட்லி அல்லது தோசைக்கு பீர்க்கங்காய் தோல் சட்னியுடன் பரிமாறவும்.

ஆங்கிலத்தில் பார்க்க

கேரட் அல்வா


தேவையான பொருட்கள்:
கேரட் – 2
சீனி – 3 கரண்டி
முந்திரி பருப்பு – 3(தேவைக்கேற்ப)
நெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
  1. கேரட்டை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. கேரட் ஆறியவுடன், கேரட்டுடன் சீனி, முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி அரைத்த கேரட், கலவையை சேர்த்து மிதமான சூட்டில் கிண்டவும்.
  4. அல்வா பதம் வரும் வரை தொடர்ந்து கிண்டி இறக்கவும்.
சூடாக பரிமாறவும்

Friday, December 21, 2007

காலி பிளவர் பஜ்ஜி



தேவையான பொருட்கள்:

காலி பிளவர் 8-10 துண்டுகள்
கடலை மாவு
4-5 கரண்டி
மிளகாய் தூள்
1 தேக்கரண்டி
இஞ்ஞிப்பூண்டு விழுது
½ தேக்கரண்டி
மல்லித்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள்
சிறிதளவு
உப்பு
தேவையான அளவு
எண்ணெய் பொறிப்பதற்கு

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித்தூள், இஞ்ஞிப்பூண்டு விழுது, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ளவும்.
  2. காலி பிளவர் துண்டுகளை கரைத்த மாவில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. ஒரு வானலியில் எண்ணெயை காய வைத்து, மாவில் ஊற வைத்த காலி பிளவர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
தக்காளி சாஸ்(tomato sauce) உடன் சூடாக பரிமாறவும்.

கேரட் பாயசம்

தேவையான பொருட்கள்:

கேரட் 2
பால்
½ கப்
சீனி
4 கரண்டி
முந்திரி பருப்பு
15 (தேவைக்கேற்ப)
நெய்
தேவைக்கேற்ப

செய்முறை:

  1. கேரட்டை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. கேரட் ஆறியவுடன், கேரட்டுடன் சீனி, 10 முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி 5 முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். முந்திரி பருப்பு பொன்னிறமானவுடன், அரைத்த கேரட், முந்திரி பருப்பு கலவையை சேர்த்து கிண்டவும்.
  4. பின் சூடான பால் சேர்த்து சிறிது நேரம் கிண்டவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

சூடாக பரிமாறவும்.

Thursday, December 20, 2007

வெங்காய புளிக் குழம்பு

தேவையான பொருட்கள்:

புளி எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்
8-10
பூண்டு
4-5 துண்டு
வரமிளகாய்
2-3 (கிள்ளிப்போடவும்)
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சிறிதளவு
மசாலா தூள்
1 கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு
1 தேக்கரண்டி
வெந்தயம்
½ தேக்கரண்டி
கறிவேப்பிலை
சிறிதளவு
உப்பு, எண்ணெய்
தேவைக்கேற்ப

செய்முறை:

  1. புளியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து புளியை கரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்க்கவும்.
  3. கடுகு, உளுத்தம் பருப்பு வெடித்தவுடன் வெங்காயம், பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. சிறிது நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மசாலா தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  5. வதக்கிய பின் கரைத்த புளியும், சிறிது நீரும் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.குழம்பு கெட்டியாகி எண்ணெயை கக்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.


வெங்காய புளிக் குழம்பை சூடான சாதம், அப்பளத்துடன் பரிமாறவும்.

பீர்க்கங்காய் பருப்பு கூட்டு


தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் 2
பருப்பு
¼ கப்
வெங்காயம்
½
மசாலா தூள்
1 கரண்டி
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள்
சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு
1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
சிறிதளவு
உப்பு, எண்ணெய்
தேவைக்கேற்ப

செய்முறை:

  1. பீர்க்கங்காய் தோலை சீவி விட்டு, பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பீர்க்கங்காய், பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மசாலா தூள் மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  3. அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
  4. பீர்க்கங்காயும் பருப்பும் வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
  5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தபருப்பு சேர்த்து, அது வெடித்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  6. வேக வைத்த பீர்க்கங்காய் பருப்பை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

சூடான சாதத்தில் பீர்க்கங்காய் பருப்பு சேர்த்து பரிமாறவும்.

பேபி கார்ன் பஜ்ஜி (பிஞ்சு சோழம் பஜ்ஜி)

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் 2
கடலை மாவு
4-5 கரண்டி
மிளகாய் தூள்
1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்
சிறிதளவு
உப்பு
தேவையான அளவு
எண்ணெய் பொறிப்பதற்கு

செய்முறை:

  1. பேபி கார்னை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ளவும்.
  3. பேபி கார்னை கரைத்த மாவில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவில் ஊற வைத்த பேபி கார்னை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

தக்காளி சாஸ்(tomato sauce) உடன் சூடாக பரிமாறவும்.

பூண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

வெங்காயம் 1
தக்காளி
2
பூண்டு
10-12 துண்டு
மஞ்சள் தூள்
சிறிதளவு
மசாலா தூள்
1½ கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு
1 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
3 கரண்டி
சோம்பு
½ தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் பூண்டை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு இடவும்.
  3. கடுகு,உளுத்தம்பருப்பு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. தக்காளி நன்றாக வதங்கிய பின் மஞ்சள் தூள், மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  6. பூண்டு வேக வைக்க பயன்படுத்திய நீரை சேர்த்து குழம்பை கொதிக்க விடவும்.
  7. குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து ஊற்றவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
பூண்டு குழம்பை சூடான சாதத்துடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

போளி

தேவையான பொருட்கள்:

மைதா 1 கப்
கடலை பருப்பு
½ கப்
துருவிய தேங்காய்
3 கரண்டி
வெல்லம்
½ கப்

செய்முறை:

  1. கடலை பருப்பை குக்கரில் வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. மைதா மாவு, எண்ணெய், நீர் கலந்து சப்பத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
  3. வேக வைத்த கடலைப்பருப்பு,துருவிய தேங்காய்,வெல்லம் அனைத்தையும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு ஒன்றாக பிசைந்து பூரணம் தயார் செய்து கொள்ளவும்.
  4. பிசைந்து வைத்த மைதா மாவில் சிறு சிறு உருண்டைகள் செய்து, மெல்லிய சப்பாத்திகளாக உருட்டிக்கொள்ளவும்.
  5. இரண்டு சப்பாத்திகளுக்கு நடுவில் பூரணத்தை வைத்து, சப்பாத்தியின் ஓரங்களை இணைத்து விடவும்.
  6. சப்பாத்திக் கல்லை காய வைத்து எண்ணெய் ஊற்றி, பூரணம் நிரப்பிய போளியை கல்லில் போட்டு இரு பக்கங்களும் பொன்னிறமானவுடன் எடுக்கவும்.

மொச்சை கொட்டை குழம்பு

தேவையான பொருட்கள்:

மொச்சை 1 கப்
வெங்காயம்
1
தக்காளி
2
மஞ்சள் தூள்
சிறிதளவு
மசாலா தூள்
1.5 கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு
1 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
3 கரண்டி
சோம்பு
½ தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்
தேவையான அளவு

செய்முறை:

  1. மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும்.
  2. காலையில் மொச்சையை குக்கரில் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி கடுகு,உளுத்தம் பருப்பு,சோம்பு சேர்க்கவும்.
  4. கடுகு,உளுத்தம் பருப்பு வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. பின் மஞ்சள் தூள், மசாலா தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  7. வேக வைத்த மொச்சை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பை கொதிக்க விடவும். (மொச்சை வேகவைத்த தண்ணீரையும் சேர்க்கலாம்.)
  8. குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் தேங்காய் பால் எடுத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

மொச்சை குழம்பை சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Wednesday, December 19, 2007

கச்சாயம்


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு 1 கப்
சீனி
2-3 கரண்டி
ஏலக்காய் பொடி
சிறிதளவு
எண்ணெய் பொறிப்பதற்கு

செய்முறை:

  1. கோதுமை மாவையும், சீனியையும் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
  2. மாவின் பதம் தண்ணியாகவோ, கெட்டியாகவோ இல்லாமல் மிதமான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  4. எண்ணெய் சூடேறியதும், ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
  5. மிதமான சூட்டில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

கச்சாயம் மிகக் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய சுவையான இனிப்பு வகை.

பாசிப்பருப்பு பாயசம்

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு ½ கப்
பச்சரிசி
2 கரண்டி
வெல்லம்
½ கப்
தேங்காய் துருவியது
¼ கப்
முந்திரி- 4 என்னம்
உலர்ந்த திராட்சை- 4 என்னம்
ஏலக்காய்- 2 என்னம்
நெய்-2 ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பயையும், பச்சரிசியையும் குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
  2. ஒரு வாணலியியை நீரை சூடேற்றி வெல்லத்தை சேர்க்கவும். வெல்லத்தை நன்றாக கரைத்து பின் வேக வைத்த பாசிப்பருப்பையும் பச்சரிசியும் சேர்க்கவும்.
  3. வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, உலர்ந்த திராட்சை,ஏலக்காய்யை வறுத்து கொள்ளவும்.
  4. பாயசத்தை இறக்கும் முன், நெய்யில் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை,ஏலக்காய்யை மற்றும் துறுவிய தேங்காய் சேர்த்து கலக்கிவிடவும் சூடாக பரிமாறவும்.

பால் பாயசம்


தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 1/2 கப்
சேமியா- 1/4 கப்(வறுத்தது)
சர்க்கரை- 3/4 கப்
பால்- 250 மிலி
முந்திரி- 4 என்னம்
உலர்ந்த திராட்சை- 4 என்னம்
ஏலக்காய்- 2 என்னம்
நெய்-2 ஸ்பூன்

செய்முறை

1.முதலில் தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசியை வேக வைத்து கொள்ளவும்.

2. வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, உலர்ந்த திராட்சை,ஏலக்காய்யை வறுத்து கொள்ளவும்.

3. தண்ணீரை கொதிக்க வைத்து கொதித்தவுடன் அதில் சேமியாவை சேர்க்கவும்.
சேமியா வெந்த பின்பு அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்.

4. இரண்டு நிமிடத்திற்கு பின் நெய்யில் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை,ஏலக்காய்யை சேர்த்து கலக்கிவிடவும்.

5. முன்று நிமிடத்திற்கு பின்னர் காய்ச்சிய பாலை சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.

பால் கோவா



தேவையான பொருட்கள்:

பால் 500 மிலி
எலுமிச்சை சாறு
3 4 துளி
சீனி
4 கரண்டி
நெய்
தேவையான அளவு

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை காய்ச்சவும். பால் திரிவதற்காக காய்ச்சும் பொழுதே 4 துளி எலுமிச்சை சாறை சேர்க்கவும். பால் திரிந்தவுடன், பாலை அடுப்பிலிருந்து இறக்கவும்.
  2. அடுப்பில் ஒரு வாணலியை சூடேற்றி, நெய்யை ஊற்றவும். நெய் சூடேறியதும், திரிந்த பால் மற்றும் சீனி சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
  3. பால் மணல் மணலாகத் திரிந்து கெட்டியானவுடன், அடுப்பிலிருந்து இறக்கவும்.

இது மிகவும் குறைந்த நேரத்தில் செய்யும் சுவையான இனிப்பு.


ஆங்கிலத்தில் பார்க்க


தக்காளி சூப்

தேவையான பொருட்கள்: (2 நபர்களுக்கு)

வெங்காயம் 2
தக்காளி
1
பச்சை மிளகாய்
1
பூண்டு
3 துண்டு
இஞ்சி
சிறிய துண்டு
மைதா
½ கரண்டி
சூடான பால்
½ கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் மற்றும் நெய்

செய்முறை:

  1. ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. வதக்கிய பின் 1.5 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து ஆற வைக்கவும்.
  4. ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும்.
  5. மற்றொரு வானலியில் நெய்யை சூடேற்றி, மைதாவை சேர்த்து வதக்கவும். இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கிளறவும்.
  6. அரைத்த சாறை சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

முட்டைக்கோஸ் சட்னி

தேவையான பொருட்கள்: (2 நபர்களுக்கு)

முட்டைக்கோஸ் 2 கப்
வெங்காயம்
2
தக்காளி
1
பச்சை மிளகாய்
1
கடுகு உளுத்தம் பருப்பு
1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும் உப்பு
தேவையான அளவு

செய்முறை:

  1. முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி முட்டைக்கோஸ், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொன்னிறமாக வதக்கவும்.
  3. தக்காளி சேர்த்து வதக்கவும். வதக்கிய பின் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  4. கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி விடவும்.

முட்டைக்கோஸ் சட்னியை இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

பருப்பு பொடி

தேவையான பொருட்கள்:

பொறிகடலை ¾ கப்
வரமிளகாய்
7-8
பூண்டு
சிறிய பூண்டு என்றால் 20 25 என்னம் சேர்க்கவும். பெரியது என்றால் 10 15 என்னம் சேர்க்கவும்.
பூண்டுத்தோலை உறிக்க தேவையில்லை.
உப்பு
தேவையான அளவு

செய்முறை:

  1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் பொறிகடலை, வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  2. ஆறிய பின்பு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். பொடியை அரைக்கும் முன் மிக்சியை தண்ணீர் இல்லாமல் துடைத்து விடவும்.

பருப்பு பொடி சூடான சாதம், இட்லி, தோசையுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

கம்பு தோசை



தேவையான
பொருட்கள்:

கம்பு – 3 கப்
உளுந்து – ½ கப்
வெந்தயம் – 1 கரண்டி
உப்புதேவையான அளவு

செய்முறை:

1. கம்பு, உளுந்து, வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி 7 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. ஊறிய பின்பு கிரைண்டரில் நன்றாக அரைத்து, உப்பு சேர்த்து எடுத்துக்கொள்ளவும்.

3. இந்த மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.

மிக்க மணம் கொண்ட இந்த கம்பு தோசையை சட்னி சேர்த்து பரிமாறவும்.

சாக்லெட் ஜவ்வரிசி பாயசம்

தேவையான பொருட்கள்: (4 நபர்களுக்கு)

ஜவ்வரிசி -1/2 கப்
சேமியா-1/4 கப்(வறுத்தது)
சாக்லெட் -3 கரண்டி(அல்லது போன்விட,பூஸ்ட்)
சாக்கரை-3/4 கப்
பால்-1/4 லிட்டர்
முந்திரி,திராட்சை,ஏலக்காய்-தேவையான அளவு
நெய்-2 ஸ்பூன்

செய்முறை

முதலில் தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசியை வேக வைத்து கொள்ளவும்.

தாளிக்கும் கரண்டியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு திராட்சை,ஏலக்காய்,முந்திரியை வறுத்து கொள்ளவும்.

தண்ணீரை கொதிக்க வைத்து கொதித்தவுடன் அதில் சேமியாவை சேர்க்கவும்.

சேமியா வெந்த பின்பு அதனுடன் சாக்கரை சேர்க்கவும்.

இரண்டு நிமிடத்திற்கு பின்னர் ஜவ்வரிசி மற்றும் நெய்யில் வறுத்த பொருட்களை சேர்த்து கலக்கிவிடவும்.

முன்று நிமிடத்திற்கு பின்னர் சாக்லெட் பாவுடர் கலந்த பாலை சேர்த்த, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி சுடாக பாரிமறவும்.